இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில், சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டென் ஹவர்ஸ்.
ஒரு பெண் காணவில்லை என்று அவரின் அம்மாவும் தாத்தாவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதனை கண்டுபிடிக்க பணியில் இறங்குகிறார் சிபிராஜ்.
அந்தப் பெண்ணை கண்டுபிடிப்பதற்கான முயற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது காவல் நிலைய கண்ட்ரோல் அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஓடும் பேருந்தில் ஒரு பெண் சித்திரவதை செய்யப்படுகிறார் என்று தகவல் வருகிறது.
அந்த குறிப்பிட்ட பேருந்து நிறுத்தி சோதனை செய்கிறார் சிபிராஜ் அந்த பேருந்தில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் அவர் கொலை செய்யப்பட்டதை அந்த பேருந்தில் இருந்த எந்த பயணியையும் பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.
பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளையும் காவல் நிலையத்திற்கு அனைத்து சென்று விசாரணை வலையத்துக்குள் கொண்டு வருகிறார் சிபிராஜ்.
கடத்தப்பட்ட பெண்ணை கண்டுபிடித்தாரா? இல்லையா? பேருந்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பேருந்தில் சித்திரவதை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் எங்கே? உண்மையா? இல்லையா? என்பதனை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே டென் ஹவர்ஸ் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : இளையராஜா கலியபெருமாள்
ஒளிப்பதிவு : ஜெய் கார்த்திக்
இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி
எடிட்டிங் : லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம் : அருண் சங்கர் துரை
சண்டை : சக்தி சரவணன்
ஒலி வடிவமைப்பு : சச்சின் (சின்க் சினிமாஸ்)
சவுண்ட் மிக்ஸிங் : அரவிந்த் மேனன்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : பாரதி ராஜா
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
ஸ்டில்ஸ் : ராஜ்
பப்ளிசிட்டி டிசைனர் : தினேஷ் அசோக்