தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தமிழ் திரை உலகிற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தெலுங்கு திரைப்படங்கள் எதுவும் ஏப்ரல் 8ஆம்தேதி ஞாயிறு முதல் தமிழ் நாட்டில் வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ரிலீஸ் செய்து வெற்றி நடை போட்டு வரும் ராம் சரணின் ‘ரங்கஸ்தலா’வும் அன்று முதல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். திரை உலகின் நலனுக்காக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவால் தமிழ் – தெலுங்கு திரைப்பட உலகிற்கும் இடையே நட்பு மேலும் வலுவாக உதவும் என்றும் கருதப்படுகிறது.