நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து அரை நிர்வாணப் போராட்டம்

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர். இன்று காலை இவர் ஹைதராபாத்தில் உள்ள தெலங்கு திரைப்பட அலுவலகத்துக்கு வந்து, திடீரென தனது ஆடைகளை கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னையும், சக நடிகைகளையும் இயக்குநர்கள் சிலர் பாலியல் ரீதியாக பயன்படுத்த முயல்வதையும், பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சிப்பதையும் கண்டித்து நடிகை ஸ்ரீ ரெட்டி போராட்டம் நடத்தினார்.

சில முன்ணனி நடிகர்களும், இயக்குநர்களும் தெலுங்கு திரை உலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதால்,  நடிகைகள் மனரீதியான அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அது மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் பிறந்து, தெலுங்கு பேசும் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தெலுங்கு திரைப்பட சங்கத்தில் என்னை உறுப்பினராக சேர்க்க வேண்டும். நான் இதுவரை 3 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பதற்கு வாய்ப்பு தேடிச்சென்றால் என்னை தவறான கண்ணோட்டத்தில் இயக்குநர்கள் அணுகிறார்கள். பெண்கள் வாழ்க்கை விளையாட்டுப்பொருளா?. நான் ஜனநாயக முறையில்தான் போராட்டம் நடத்தினேன். எந்தவிதத்திலும் யாரையும் என் போராட்டம் பாதிக்கவில்லை என்று கூறினார்.