தமிழக அமைச்சர்கள் ஓ.பி.எஸ்யுடன் சந்திப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதின் தாயார் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க சென்ற தமிழக அமைச்சர்கள் தங்கமணி, மற்றும் வேலுமணி ஆகியோர் அங்கு இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளனர். பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலம் குறித்தும் இரு அமைச்சர்கள் கேட்டு அறிந்தார்கள்.

இரு அணிகளும் இணையும் என்று அதிமுக தொடர்களுக்கிடையே பரவலாக பேசபட்டு வந்த நிலையில், இன்று மாலை ஓ.பி.எஸ்.தரப்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வதை சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.