தமிழ் குடிமகன் விமர்சனம்

சேரன், லால், ஸ்ரீபிரியங்கா, வேல ராமமூர்த்தி, எஸ்.ஏ. சந்திரசேகர், அருள்தாஸ், ரவிமரியா, தீப்ஷிகா, துருவா, மயில்சாமி மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் தமிழ் குடிமகன்.

மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் தொழில் மற்றும் சலவைத்தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் சேரன். அந்த தொழில் செய்பவர்களையும், அத்தொழிலையும் ஊர்மக்கள் தரக்குறைவாக பார்க்கிறார்கள். அதனால் அந்த தொழிலை செய்ய மாட்டேன், அந்தத் தொழில் தனக்கு தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டு, வேறு தொழில் செய்ய தொடங்குகிறார் சேரன். ஆனால் எந்த தொழிலை செய்தாலும், எந்த நிலைக்குப் போனாலும் இவர் இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் சேரனுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து தன் நிலையை மாற்றியே தீருவேன் என்று போராட்டத்தோடு வாழ்க்கை நடத்துகிறார் சேரன்.

இந்நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் இறந்து விட, அவரது அவரோட உடலை அடக்கம் செய்ய சேரனை கூப்பிடுகிறார்கள். ஆனால் சேரன் இனி அந்த தொழிலை செய்யப் போவதில்லை என்று குலசாமி முன் சத்தியம் செய்து விடுகிறார். ஆளாளுக்கு மாறி மாறி வந்து கூப்பிட்டாலும் அந்த தொழிலை செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

சேரன் தங்களை மீறி செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அப்போது பிரச்சனை நீதிமன்றத்திற்கு செல்கிறது இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது? சேரனுக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா? என்பதே தமிழ் குடிமகன் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம்: எசக்கி கார்வண்ணன்

இசை: சாம் சி.எஸ்

தயாரிப்பு: லட்சுமி கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்