சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 218ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து வீர வணக்கத்தை செலுத்திய பின் மாலை அணிவித்து மரியாதை செய்தார் .
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் வைகோ தமிழகததில் மானவாரி பயிரிடும் விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை கிடைக்கமால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசயிகளை தமிழக அரசு வஞ்சிக்ககூடாது என்றும், பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்ட விவசாயிகளை திரட்டி வரும் அக்-31ந்தேதி கோவில்பட்டியில் தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார் . தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன்பு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட தமிழக அரசு தவறி விட்டது.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளுக்கான வசதி அரசு மருத்துவமனையில் இல்லை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாநிலத்தினை கொள்ளைநோய் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக அறிவிக்க வேண்டும், நியாயத்திற்காக போராடுபவர்களை வ்ன்முறையால் தமிழக அரசு அடக்க நினைக்க கூடாது, மணல் கொள்ளை, கூடன்குளம் அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்திய முகிலனை கைது செய்தது கண்டிக்கதக்கது, அவரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.