காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தினர். காவல்துறை வந்து கேட்டுக்கொண்டதால் தமிழக விவசாயிகள் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து 76ஆம் நாளான இன்று தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி போலீசார் அவர்களை இன்று கைது செய்துள்ளனர்.