தமிழனுக்கு சுயமரியாதை அதிகம் உலகநாயகன்

D- 16

 இந்த வாரமும் காயத்ரி தொடர்ந்து கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார் என்பதை கண்டித்தார். அவர் என்ன என்று கேட்டபோது தலைமுடியை தொட்டு ஹேர் மாதிரினு காயத்ரி கூறியதை சுட்டிக்காட்டினார். அதே போல் காயத்ரி உரையாடல் என்றால் என்ன என்று கேட்க உங்களுக்கு சீராகவே என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்று கிண்டல் செய்தார். பேசும் போது, உங்களுக்கு மட்டுமல்ல பிக்பாஸ்க்கும் இதை நான் கூறிக்கொள்கிறேன்.

ஹிந்தியில் 10 சீசன் தாண்டியிருக்கலாம். ஆனால் தமிழனுக்கு சுயமரியாதை அதிகம் இங்கு வரும்போது சில கண்ணியம் இருக்க வேண்டும் என்று கையசைத்து எச்சரிக்கை செய்தார். நேற்று போட்டியாளர்களை மனநிலை சரியில்லாதவர்களாக வைத்து நடத்தியதையும் கண்டித்தார். ஆரவ்விடம் ஓவியாவிற்கு முத்தம் கொடுத்ததை மற்றவர்களிடம் ஒப்புக்கொள்ளச்சொல்லி புரிய வைத்தார். ஷக்தி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்காததை மீண்டும் சுட்டிக்காட்டினார்.காயத்ரி, ஷக்தி நாட்டாமைத்தனம் செய்கிறார்கள் என்பதையும் மற்றவர்கள் வாயால் சொல்ல வைத்தார்.தன் மீது வழக்கு போடுவதைக் கண்டு தனக்கு அச்சமில்லை என்றும் கூறினார்.இன்னும் வரும் வாரங்களிலும் உலகநாயகனின் விஸ்வரூபத்தை காணலாம்.