திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திரையரங்கை திறந்து வைத்தார் நடிகர் விஷால்

திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திரையரங்கை திறந்து வைத்தார் நடிகர் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸை திறந்து வைத்தார். புதுபொலிவுடன் திருவொற்றியூர் MSM லெமுரியா சினிமாஸ்.

திருவொற்றியூர் பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான MSM தியேட்டர் தற்போது லெமுரியா சினிமாஸ் என பெயர் மாற்றப்பட்டு நேற்று இத்திரையரங்கை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ரசிகர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

புத்தம் புதிய டிஜிட்டல் சரவுண்ட் சவுண்டுடன், துள்ளியமான காட்சிக்கு உயர்தர 2K புரொஜெக்டர், முழுதும் குளூரட்டப்பட்ட ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. சினிமாவை குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏதுவான இடமாக திரையரங்கம் இருக்க தரம் கூட்டப்பட்ட கேண்டின் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் செய்யப்பட்டுள்ளது.

லெமுரியா சினிமாஸை திறந்து வைத்து பேசிய விஷால் ‘ சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் எண்ணிக்கைகள் பெருக வேண்டும். மக்களுக்கு தரமான சினிமா அனுபவம் கிடைக்க திரையரங்கு உரிமையாளர்கள் சகல வசதிகளும் மக்களுக்கு செய்து தருவது சினிமாவை வளர்க்கும்’ என்றார்.