டக்கர் விமர்சனம்

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், சித்தார்த், திவ்யான்ஷா, யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் டக்கர்.

குணசேகரனான சித்தார்த், ஓட்டல், பார், ஜிம் என பல இடங்களில் வேலைகளை பார்த்து பணக்காரனாக வேண்டும் என வெறியுடன் இருக்கிறார். ஆனால் அவருடைய அவரது கோபம் அவருக்கு எப்போதும் பிரச்சினைகளை உருவாக்க எந்த வேலைகளில் நிலைத்து நிற்க முடியாமல், கடைசியில் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு பென்ஸ் கார் டிரைவராக பணிபுரிகிறார்.

அப்போது சென்னையிலுள்ள ரவுடிகளிடம் சண்டை போட்டுவிட்டு அவர்களின் காரை எடுத்துச் செல்கிறார். அந்த காருக்குள் கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் லக்கி இருக்கிறார். அந்த அந்தப் பெண் எதற்காக கடத்தப்பட்டார் அவரை சித்தர் காப்பாற்றினார் பணக்காரனாக ஆனாரா? என்பதே டக்கர் படத்தின் மீதிக் கதை.

சித்தார்த் அழகாக எதார்த்தமாக நடித்து இருக்கிறார்.

திவ்யன்ஷா கௌசிக் எதற்கும் துணிந்த பெண்ணாக, அரைகுறை ஆடை, மது, சிகரேட் என்று பணக்கார திமிர் பிடித்த அழகு, இளமை, துணிச்சல், தைரியம் கலந்த கலவையாக கவர்ச்சியில் கலக்கியுள்ளார்.

யோகி பாபுவின் நகைச்சுவை அருமை.