டி.டி.வி.தினகரனுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது நடைபெற்று வரும் பெரா வழக்கில் மூன்று மாதங்களில் முடித்தாகவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விரைந்து முடிக்கத்தான் நீதிமன்றத்திற்கு வருவார்கள் வழக்கை முடிக்க கூடாது என்று நீங்கள் தாக்கல் செய்துள்ளது விசித்திரமாக உள்ளது என்று கூறிய நீதிபதிகள். இது போன்ற மனுவினை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக்கூடாது.

இதை போன்று மனுவினை தாக்கல் செய்தால் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறிய நீதிபதி மனுவினை வாபஸ் பெருகிறீர்களா அல்லது அபராதம் விதிக்கட்டுமா என்று கேட்டதற்கு. தினகரன் தரப்பு மனுவினை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். பல ஆண்டுகளா நடைபெற்று வரும் பெரா வழக்கில் தினகரன் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவானது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.