சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ‘இளையராஜா 75’ விழாவிற்கு வருகை

‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, ‘இளையராஜா 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் திரு. ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். திரு. கமலஹாசன் அவர்களும் வருவதாகக் கூறியிருக்கிறார்.