தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஸ் ஆகியோர் உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் உள்ள ஆடு,கோழி, மீன் இறைச்சிகடைகள், கடலையூர் சாலை மற்றும் எட்டயபுரம் சாலையில் இறைச்சிகடைகளில் கோவில்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் முருகேசன், நகராட்சி சுகாதார அலுவலர்கள் சுரேஸ், சீனிவாசன், நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 18 கடைகளில் தரமில்லாத, சுகாதாரமற்ற மற்றும் கொட்டு போன ஆடு,கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர் சுமார் 1லட்ச ரூபாய் மதிப்புள்ள 200கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான கிட்டங்கில் அழிக்கப்பட்டது. மேலும் தரமற்ற, கொட்டுபோன இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என்று வியாபாரிகளிடம் அறிவுறுத்தினர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.