இளம்நடிகர் விபின், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்புவின் குரலில் அட்டகாசமான ஆல்பம் பாடல் ஒன்றை சதாசிவம் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளார்.
“ஞேயங் காத்தல் செய்…” என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரி தான் இந்த ஆல்பத்தின் பெயர். பாரதியின் வரிகள் மீது இளைஞர்களுக்கு எப்போதும் தனிப்பற்று உண்டு. அந்த வகையில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த சிம்புவின் குரலில், மனதை கவரும்படியான விபினின் உணர்வுபூர்வமான நடிப்பில், ஸ்ரீநாத் பிச்சை இசையில், எஸ். சந்தோஷ் குமார் ஒளிப்பதிவில், கார்த்திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், இந்த ஆல்பம் பாடலை மிக அழகாக உருவாக்கி உள்ளது சதாசிவம் கிரியேஷன்ஸ்.
சிம்பு குரலில் விபின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த நண்பர்கள் தின ஆல்பம் பாடல் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது உறுதி. இந்த ஆல்பம் பாடலைத் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி தனது அட்டகாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்த இருக்கிறார் நடிகர் விபின்.