ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை காங்கிரஸ் துணை தலைவர் இன்று பார்வையிட்டார். முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் பின்னர் குஜராத் மாநிலம் சென்று பார்வையிட்டார். குஜராத்தின் தனேரா பகுதியை பார்வையிட சென்ற ராகுல் காந்தி அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்பொது அப்பகுதியை சேர்ந்த சிலர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரதமர் மோடிக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். அப்போது திடீரென சிலர் அவர் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. மேலும், அவருடைய வாகனத்துடன் வந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.