ஸ்டார் விமர்சனம்

Rise East Entertainment & Sri Venkateswara Cine Chitra சார்பில், பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி தயாரிப்பில், இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போகன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், பாண்டியன், உள்ளிட்ட நட்சத்திங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஸ்டார்”.

லால் மற்றும் கீதா கைலாசத்திற்கு
மகனாக வருகிறார் கவின். தன்னுடைய 7 வயதில் இருந்தே சினிமாவில் ஸ்டாராக என்ற ஆசையோடும், கனவோடும் வாழ்ந்து வருகிறார் கவின். தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற விரும்பும் அப்பாவாக லால் தன்னால் முடிந்த உதவிகளையும் முயற்சிகளையும் செய்கிறார்.

ஆனால் அம்மா கீதா கைலாசமும் மகனின் சினிமா ஆசையை விட அவனுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் நல்ல சம்பளத்தில் ஒரு வேலையில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆகையால், சினிமா கனவில் இருக்கும் கவினை இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்.
அங்கு கவினுக்கு காதல் ஏற்படுகிறது, காதலில் திலைத்திருந்தாலும் சினிமாவின் கனவு கவினை, மும்பையில் இருக்கும் சினிமா கற்றுத் தரும் பயிற்சியாளரிடம் சென்று நடிப்பை கற்றுக் கொள்ள செல்கிறார்.

இவ்வாறாக கவினின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில், கவினின் முகத்தில் காயம் ஏற்படுகிறது.

கவினின் ஆசைப்படி கவின் சினிமாவில் ஸ்டார் ஆனாரா? இல்லை அம்மாவின் விருப்பப்படி ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்தாரா? கவினின் காதல் கைகூடியதா? இல்லையா? என்பதே ஸ்டார் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : இளன்
எழுத்தாளர் : இளன்
ஒளிப்பதிவு : எழில் அரசு K
இசை : யுவன் சங்கர் ராஜா
படத்தொகுப்பு : பிரதீப் E ராகவ்
இணை தயாரிப்பாளர்கள் : P ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்