சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள காந்திசிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஸ்டாலினுடன் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டபோது 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ரத்த காயங்களுடன் வெளிவந்ததாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சென்ற ஸ்டாலின், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.