திமுக தலைவர் பதவிக்கே ஸ்டாலினால் வரமுடியவில்லை

 

Vikram upcoming movie IRUMUGAM

ஸ்டாலினால் திமுக தலைவர் பதவிக்கே வரமுடியவில்லை. எங்கிருந்து தமிழகத்தில் முதல்வராக முடியும் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  அதிமுக உள்கட்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அனுப்பியுள்ளனர். 

இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அதிமுக அணிகள் இணைந்ததன் மூலம் நாம் புதிய வரலாறு படைந்துள்ளோம். தமிழகத்தில் பிரிந்த கட்சிகள் ஒன்றிணைந்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை அதிமுக உடைத்துள்ளது. திமுகவின் தலைவராக கூட ஸ்டாலினால் முடியவில்லை. இந்நிலையில் அவர் தமிழகத்தின் முதல்வராக எப்படி முடியும் என்று கேள்வி எழுப்பினார்.