SRUTI சீசன் 2 ஆன்லைன் பாட்டுப் போட்டி நிகழ்ச்சி துவக்கம்

SRUTI சீசன் 1 என்பது உலகளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டு போட்டியாகும்.
 
அதுவும் குறிப்பாக தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சியை உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்துபவர்கள் வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி. இவர்கள் இருவரும் பிரபல பாடகர்கள் மட்டுமின்றி Zee TVயில் நடத்தப்பட்ட சரிகமபா நிகழ்ச்சியின் போட்டிக்கு ஜூரியாக இருந்து திறம்பட செயல்பட்டவர்கள்.
 
இந்த இருவர்களால் SRUTI சீசன் 1 என்ற பாட்டுப்போட்டி நிகழ்ச்சி சென்ற வருடம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு புகழ்பெற்றது. 60 நாட்கள் நடந்த இப்போட்டியில் 4 வகையாக பிரிக்கப்பட்டு 5 சுற்று போட்டிகள் வைத்து நடத்தப்பட்டது.
 
இந்த பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களை  தேர்வு செய்தவர்களின்  குழு  – இசையமைப்பாளரும், தமிழ் சினிமா இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவருமான தினா, பின்னனி  பாடகர்கள் அனந்து மற்றும் கங்கா, இசை மழலையின் தலைவர் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள்.
 
SRUTI சீசன் 1 நிகழ்ச்சியில் 283 போட்டியாளர்கள், 17 நாடுகளிலிருந்து பங்கேற்று தமிழ் இசைக்கு பெருமை சேர்த்தார்கள். SRUTI சீசன் 1 பாட்டுப் போட்டியில் முதல் பரிசை பணமாக பெற்றதோடு மட்டுமின்றி, பின்பு விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் Zee TV நடத்தும் சரிகமபா  போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்ச்சியின் தனி சிறப்பு என்னவென்றால், முழுக்க முழுக்க முகநூல் மூலமாகவும் ( )  எங்கள் வெப்சைட்  ( ) மூலமாகவும் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக ஆன்லைனில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இறுதிகட்டப்போட்டி முகநூலில் நேரடியாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
 
அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பாகும்.
 
SRUTI சீசன் 1 நிகழ்ச்சி பத்மபூஷன் விருது பெற்ற வித்வான் விநாயக்ராம் மற்றும் பின்னணி பாடகி சுஜாதா அவர்களின் திருக்கரங்களால் துவக்கி வைக்கப்பட்டது.
 
எங்களின் SRUTI சீசன் 1 இமாலய வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் சுருதி சீசன் 2 என்ற தலைப்பில் பாட்டு போட்டிகள் நவம்பர் 6ஆம் தேதி துவங்க உள்ளது 60 நாட்கள் நடத்தப்படும் இந்த SRUTI சீசன் 2  நிகழிச்சி, இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
15 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்கு மேலானவர்கள் ஐந்து சுற்று போட்டிகள் நடத்தப்படும். போட்டியாளர்களை 7 இசை வகைகளைக் கொண்டு தேர்வு செய்து சிறப்பாக நடத்தப்படவுள்ளது.