சென்னை ஜீலை 13 : நடிகர் சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். கடந்த 40 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான, ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 40-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- விகிதம் மொத்தம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான ’தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை அமைப்பிற்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், வேலூர் மாவட்டம் திருப்புக்கூழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை, முன் மாதிரி பள்ளியாக செயல்பட தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கும் மற்றும் அகரம் அறக்கட்டளையின் ‘நமது பள்ளி’ திட்டத்தின் திறன்மிகு வழிநடத்துதலுக்காக, அகரமுடன் இணைந்து செயலாற்றிவரும் மறைமலை நகர் அரசு மேல்நிலை பள்ளி, கருங்குழி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்களது தன்னலமில்லாத சமூகப் பங்களிப்பிற்க்காக விழா மேடையில் கௌரவிக்கபட்டனர்.
நிகழ்ச்சியில் திரு. எஸ். கார்த்தி அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார் 1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குபடுத்தி வருகிறது 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்கு பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போகவேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களது கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்று கூறினார். விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து, மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்தார்.
அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் திரு.சூர்யா