குறைவாக துளையிட்டு செய்யப்படும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையில் பல்வேறு அறுவைசிகிச்சை உத்திகளை முன்னிலைப்படுத்துகிற இது தொடர்பான விடைய ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகிற MISSICON 2017 என்ற மூன்று நாள் கருத்தரங்க நிகழ்வை ஒரு வருடாந்திர கருத்தரங்காக தி சென்னை ஸ்பைன் சொசைட்டி நடத்தியது. ஊலகெங்கிலுமிருந்து வந்திருந்த எட்டு முன்னணி நிபுணர்களால் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிகல் சென்டரில் நேரலை அறுவைசிகிச்சைகள் மற்றும் வீடியோ செய்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன.
MISS-ன்ஒட்டுமொத்த வரம்பு மற்றும் வீச்செல்லையை இக்கருத்தரங்கு ஆய்வு கருத்தாக்கமாக கொண்டிருந்தது. இக்கருத்தரங்கு நிகழ்வின் ஒரு பகுதியாக, முதுகுத்தண்டு தொடர்பான சிகிச்சையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மற்றும் முன்னணி அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஐந்து பேருடன் உலக எண்டோஸ்கோபிக் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை அமைப்பின் நிறுவனர் தலைவரும் மற்றும் தேஸ்டான்டு உத்தியை கண்டுபிடித்தவரான பேராசிரியர் தேஸ்டான்டு அவர்களும் கவுரவிக்கப்பட்டனர். இக்கருத்தரங்கு நிகழ்வின் தொடக்கவிழாவின்போது ஒரு பாடப்புத்தகமும் வெளியிடப்பட்டது.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர். P. ஏ. விஜயராகவன், இந்நாளின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.’முதுகுத்தண்டு ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு நபருக்கும் மிக முக்கியமானது. உடல் அசைவு, ஆதரவு, ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க இது உதவுகிறது. சுவாசத்தை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் நடப்பதிலும் ஒரு முக்கியமான கட்டமைப்பாக முதுகுத்தண்டு இருக்கிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் காயங்கள் மற்றும் பல்வேறு நோய்கள், பணியாற்றுகின்ற நாட்கள் இழக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.
கடந்த காலத்தில் இத்தகைய பாதிப்பு நிலைகளுக்கு திறந்தநிலை அறுவைசிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. இத்தகைய சிகிச்சை முறையில் அதிகரித்த இடர்களும், நோய் பாதிப்பு அளவும் இருந்தன. ஆஐளுளு உத்தி கண்டறியப்பட்டது, திறனிழப்பு ஏற்படுவதை குறைத்திருக்கிறது@ விரைவாக குணமடைந்து மீள்வதை அதிகரித்திருக்கிறது. அத்துடன் இத்தகைய நோயாளிகள் மிக விரைவாகவே பணிக்கு திரும்புவதற்கு வழிவகுத்திருக்கிறது,” என்று கூறுகிறார் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் தலைவரும் ,குழு தலைவருமான டாக்டர். மு. கார்த்திக் கைலாஷ்.உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் முதுகுத்தண்டு பிரச்சனையினால் 5 லட்சம் நபர்கள் அவதியுறுகின்றனர்.
இவர்களுள், பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களே மிக அதிக இடரை கொண்டிருக்கின்றனர். முதுகுத்தண்டு பிரச்சனையால் அவதியுறுகிற நபர்களின் வயது பிரிவானது, ஆண்களில் 20-30 ஆண்டுகளாகவும் மற்றும் பெண்களில் 15-19 ஆண்டுகளாகவும் இருக்கின்றது. அதே வேளையில் வயது முதிர்வின் காரணமாக 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் இத்தகைய பாதிப்பு இருக்கிறது. எண்டோஸ்கோபிக் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை அல்லது ஆஐளுளு சூழலியல் குறித்து பேசிய டாக்டர். கைலாஷ், ‘எண்டோஸ்கோபிக் அறுவைசிகிச்சை அல்லது சாவித்துளை அறுவைசிகிச்சை என்று மிகப்பொதுவாக அறியப்படுவதில், ஒரு சிறிய துளை அல்லது கீறல் மட்டுமே தேவைப்படுகிறது. இதில் குறைவான அளவே இரத்தம் வெளியேறுகிறது. அத்துடன் இத்தகைய சிகிச்சை முறையில் மிக வேகமாக நோயாளி குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார். இந்தியாவில் இந்த சிகிச்சை உத்தியில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டு கழுத்து மற்றும் கீழ்ப்புற முதுகு வலிகள் பெரும்பாலானவற்றிற்கு நிவாரணமளிக்கிற மைக்ரோ எண்டோஸ்கோபிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இருக்கின்றனர்,” என்று கூறினார்.
வளர்ச்சியடைந்துவரும் நாடாக இந்தியா இருந்தபோதிலும், முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக மக்கள் விரும்பித்தேடிவரும் அமைவிடங்களுள் ஒன்றாக இது இருக்கிறது. குறைவான செலவு என்பது ஒரு காரணியாக இருந்தாலும், தரமான சிகிச்சை, கவனிப்பு மற்றும் சிறப்பான நிபுணத்தும் கொண்ட அறுவைசிகிச்சை மருத்துவர்கள் போன்ற பிற காரணங்களே பிற நாடுகளிலிருந்து மக்களை ஈர்ப்பதற்கான காரணிகளாக இருக்கின்றன. மேற்கத்திய உலகைப்போலவே ,எண்டோஸ்கோபிக் அறுவைசிகிச்சையானது இப்போது அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது. ‘இந்தியாவெங்கிலும் உள்ள அறுவைசிகிச்சை நிபுணர்கள் மத்தியில் அறிவையும், தகவலையும் பகிர்ந்துகொள்வதற்கான தளமாக இது இருக்கிறது மற்றும் எண்டோஸ்கோபிக் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையில் இடம்பெறுகிற பல்வேறு உத்திகள் குறித்து விவாதங்கள் திகழும் அமைவிடமாகவும் இக்கருத்தரங்கு அமைகிறது.
பல பிரபல அறுவைசிகிச்சை நிபுணர்களால் எழுதி தொகுக்கப்பட்ட ஒரு புத்தகம் ஒன்றையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். நாடெங்கிலும் வளர்ந்துவரும் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்காக, ஒரு மேற்கோள் ஆதார புத்தகமாக இது திகழும்,” என்று டாக்டர் ஸ்ரீனிவாஸ் ரோஹிதாஸ் கூறினார்.