அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் “தயாரிப்பு எண் 2” மிகவும் சிறப்பான தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்

சரியான திட்டமிடல் மற்றும் கச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகிய இரண்டும் தான்  எப்பொழுதும் திரைப்படங்களை குறித்த நேரத்தில் முடிக்க முக்கியமான  இருக்கும். 

‘SP சினிமாஸ்  தயாரிப்பு எண் 2’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன் சிறிய சம்பிரதாய சடங்குகளுடன் படப்பிடிப்பு துவங்கியது. குறிப்பிடத்தக்க வகையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் பரபரப்பான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவருமே ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதைகளில் நடிப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டுபவர்கள். இருவரும் இணைந்து நடிக்கும் இந்த “தயாரிப்பு எண் 2” மிகவும் சிறப்பான தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

பரத் நீலகண்டன் படத்தை இயக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்திய சென்சேஷனல் இசையமைப்பாளர் தர்புகா சிவா  இசையமைக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

நடிகர்கள்: அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யோகிபாபு, காயத்ரி, ரமேஷ் திலக், ‘எருமை சாணி’ விஜய், ‘கும்கி’ அஸ்வின்,

  ‘ஜாங்கிரி’ மதுமிதா & மற்றும் பலர்.

தயாரிப்பாளர்கள்: S.P சங்கர், சாந்தப்பிரியா

இணை தயாரிப்பாளர்கள்: கிஷோர் சம்பத் & டெஷா ஸ்ரீ. டி

எழுத்து & இயக்கம்: பரத் நீலகண்டன்

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

இசையமைப்பாளர்: தர்புகா சிவா

படத்தொகுப்பு: ரூபன்

திரைக்கதை ஆய்வு & ஒலி வடிவமைப்பு: உதயகுமார்.டி

தயாரிப்பு வடிவமைப்புகள்: கமலநாதன்

சண்டைப்பயிற்சி: சுதேஷ்

பாடல்கள்: தாமரை

நிர்வாக தயாரிப்பு: சதீஷ் குமார்.டி