தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் அதிகம்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் கூறுகையில், “தென்னிந்தியாவில் மேற்கு திசைக்காற்று வலுவான நிலையில் உள்ளதால் லட்சத்தீவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.