நடிகை கௌதமி மற்றும் தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வித்துறை இயக்குநர் டாக்டர். யு. எட்வின் ஜோ ஆகியோர் இணைந்து அண்ணாநகரில் அமைந்துள்ள மிக நவீன கருத்தரிப்பு சிகிச்சை மையமான ஒயாசிஸ்-ஐ தொடங்கி வைக்கின்றனர்.
கருத்தரிப்பு மையத்திற்கான ஒயாசிஸ் மையம் என்பது தெலங்கானா மற்றும் ஆந்திரபிரதேஷ் மாநிலங்களில் கருத்தரிப்பு சிகிச்சை மைய சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் மற்றும் இந்திய அளவில் நான்காவதாகவும் தரவரிசையில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய நவீன மையமானது, IVFல் புகழ் பெற்ற ஒயாசிஸ் நிபுணத்துவத்தை வழங்குகிறது. இதில் கிளாஸ் 10,000 பரிசோதனையகம் மற்றும் சிக்கலான லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சைகளுக்கும மற்றும் ஆண் உறுப்பு நோயியலுக்கும் மற்றும் மேம்பட்ட வசதிநிலைகள் இடம் பெற்றுள்ளன.
நோயாளிகளை கையாள்வதற்கு அறநெறி சார்ந்த மற்றும் வெளிப்படையான மற்றும் அணுகுமுறை ஒயாசிஸ்-ன் மைய மதிப்பீடுகளுள் உள்ளடங்கும். தவறுகளை தவிர்ப்பதற்கு ஒரு கண்டிப்பான சாட்சி அமைப்புமுறை மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் சான்று அடிப்படையிலான தனிப்பட்ட சிகிச்சை ஆகியவை இதில் உள்ளடங்கும். ஒட்டுமொத்தமாக 350-க்கும் அதிகமான ஆண்டுகள் அனுபவம் கொண்ட மருத்துவக்குழுவினரால் இச்சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் ஏறக்குறைய 30 மில்லியன் தம்பதியரை கருத்தரிப்பின்மை / மலட்டுத்தன்மை பாதிக்கிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் 20-30 என அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாறிவரும் வாழ்ககை முறைகள் மற்றும் அவை தொடர்புடைய உடல்நிலை சிக்கல்கள், மனஅழுத்தம் மற்றும் மரபணு காரணிகள் இத்தகைய மலட்டுத்தன்மை நேர்வுகள் அதிகரித்து வருவதற்கு காரணமாக இருக்கின்றன.
சென்னை, 2017, அக்டோபர் 29 : நவீன கருத்தரிப்பு மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையமான இனப்பெருக்க மருத்துவத்திற்கான ஒயாசிஸ் மையம் (Oasis Centre for Reproductive Medicine), சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று அண்ணாநகரில் புகழ்பெற்ற திரைப்பட நடிகை கௌதமி தடிமல்லா மற்றும் தமிழக அரசின் மருத்துவக்கல்வி துறை இயக்குநர் டாக்டர். எட்வின் ஜோ ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியின்போது, இதன் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான திரு. கிரண் கடேலா, இணை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர். துர்கா ஜி. ராவ் மற்றும் சென்னையில் அமைந்துள்ள இனப்பெருக்க மருத்துவத்திற்கான ஒயாசிஸ் மையத்தின் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைக்கான முதுநிலை நிபுணரும், மேம்பட்ட லேப்ராஸ்கோபி வல்லுநருமான டாக்டர். எஸ். அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சட்குரு ஹெல்த்கேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்பதன் ஒரு பிரிவான ஒயாசிஸ் சென்டர் ஃபார் ரீபுரொடக்டிவ் மெடிசின், கருத்தரிப்புக்கான சிகிச்சைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை அறிமுகம் செய்ததன் மூலம் தென்னிந்தியாவில் மருத்துவ சிகிச்சை நடைமுறையை மறுநிர்ணயம் செய்திருக்கிறது. நோயாளியுடன் சந்திப்புகள், பரிசோதனை ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகள் ஆகிய அனைத்தும் ஒரு கூரையின்கீழ் செய்யப்படுகிற ஒரு பகல் நேர சிகிச்சை கிளினிக்குகளை நோயாளிக்கு தோழமையுள்ள சேவையாக இது வழங்குகிறது. 2009-ல் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே இதன் உயர் வெற்றி விகிதங்களுக்காக ஒயாசிஸ் மிகச்சிறந்த நற்பெயரை ஈட்டியிருக்கிறது. சர்வதேச அனுபவத்துடன் உயர் நிபுணத்துவம் கொண்ட மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையில் நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவின் தலைமையின்கீழ் இதன் உயர்தரமான சேவைகள் வழங்கப்படுவதே இதற்கு காரணம். ஆந்திரபிரதேஷ், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இச்சங்கிலித்தொடர் நிறுவனமானது தற்போது 8 மையங்கள் கொண்டதாக விரிவடைந்திருக்கிறது.
மலட்டுத்தன்மை / கருத்தரிக்க இயலாமை என்பது, கருத்தரிக்க 2 ஆண்டுகளாக முயற்சி செய்த பிறகும் இயற்கையான முறையில் ஒரு பெண் கருத்தரிக்க இயலாத நிலையையே குறிக்கிறது. இந்தியாவில் கருத்தரிப்பதற்கான சிகிச்சை சேவையில் தேவைப்படுகின்ற தம்பதியர் 30 மில்லியனுக்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் அச்சுறுத்தும் வகையில் இத்தகைய நேர்வு 20-30 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாறிவரும் வாழக்கை முறைகள், துரித உணவு / நொறுக்குத்தீனி நுகர்வு, மனஅழுத்தம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை, நீண்ட பணி நேரங்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவக்கோளாறுகள், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு, தாமதிக்கப்பட்ட திருமணங்கள், ஆகியவை இப்பிரச்சினையை இன்னும் கூடுதல் சிக்கலானதாக மாற்றுகின்றன. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர்ப்புறம் சார்ந்த ஒரு நிகழ்வாக இருந்துவந்த மலட்டுத்தன்மை பிரச்சினை இப்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் மற்றும் ஊரகப்பகுதிகளிலும் கூட பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
‘ஒவ்வொரு தம்பதியரையும் தனிப்பட்ட விதத்தில் முழுமையான ரீதியில் சிகிச்சையளிப்பதும் மற்றும் அனைத்து அம்சங்களுக்கும் கவனம் செலுத்துவதிலும் மற்றும் தனித்துவமான சிகிச்சை நெறிமுறைகளோடு அவர்களது கருத்தரிப்பு இலக்கை நோக்கிய பயணத்தை திட்டமிடுவதிலும் ஒயாசிஸ் நம்பிக்கை கொண்டிருக்கிறது. மேற்கொள்ளப்படும் சிகிச்சை நடைமுறைகள் குறித்து உரிய தகவல்கள் மற்றும் விவரங்களை வழங்குவதும் மற்றும் தம்பதியருக்கு சிகிச்சை காலம் முழுவதிலும் மனநலம் சார்ந்த மற்றும் உணவுமுறை ஆலோசனை ஆதரவை வழங்குவதே எங்களது பிரதான செயல்பாடாக இருக்கிறது. எங்களது உயர்வான வெற்றிவிகிதத்திற்கு இந்த அணுகுமுறையே காரணமாகும் மற்றும் முக்கியமாக தொழில்நுட்ப மேம்பாடுகளை தம்பதியருக்கான சிகிச்சைத்திட்டங்களோடு ஒருங்கிணைப்பதும் வெற்றிக்கான காரணமாகும். IVF/ICSI என்பதற்கும் மேலாக மேம்பட்ட கருத்தரிப்பு சிகிச்சைகளான IVM, PGS, PGD மற்றும் விந்தணு சேமிப்பு போன்ற அனைத்து சிகிச்சை முறைகளும் ஒயாசிஸ்-ல் வழங்கப்படுகின்றன என்று கூறுவதில் நாங்கள் உண்மையிலேயே பெருமை கொள்கிறோம்,” என்று கூறுகிறார் டாக்டர். துர்கா பு. ராவ்.
தென்னிந்தியாவில் ஏற்கனவே அமைந்துள்ள அதன் மையங்களில் எட்டப்பட்டிருக்கும் உயர்வான வெற்றி விகிதங்களில் பின்புல ஆதரவோடு சென்னையில் தனது சேவைகளை ஒயாசிஸ் சென்டர் தொடங்குகிறது. அண்ணாநகரில் அமைந்துள்ள இந்த சென்னை மையமானது, இனப்பெருக்க மருத்துவத்திற்கான ஒயாசிஸ் மையத்தின் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைக்கான முதுநிலை நிபுணரும், மேம்பட்ட லேப்ராஸ்கோபி வல்லுநருமான டாக்டர். எஸ். அசோக் குமார், மலட்டுத்தன்மை சிகிச்சைக்கான முதுநிலை நிபுணர் டாக்டர். வசுந்தரா ஜெகநாதன் ஆகியோரை உள்ளடக்கிய அதிக அனுபவம் கொண்ட மருத்துவக்குழுவினரின் தலைமையின்கீழ் செயல்படும். இம்மையமானது, சென்னை மாநகரம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வருகின்றவர்களுக்கு சிகிச்சை வழங்கும். முன்பதிய மரபணு ஸ்கிரீனிங் (PGS), முன்பதிய மரபணு நோயறிதல் (PGD) இன் விட்ரோ முதிர்ச்சி (IVM) மற்றும் ஃபெர்ட்டிலிட்டி பிரசர்வேஷன் போன்ற இனப்பெருக்க மருத்துவத்திலுள்ள நவீன, மேம்பட்ட சிகிச்சைகளை இம்மையம் வழங்கும். உயர்வான வெற்றி விகிதங்களை உறுதிசெய்கிற ஒரு மிக நவ Pனமான கிளாஸ் 10,000 பரிசோதனையகத்தை இது நிறுவியிருக்கிறது.
8 ஆண்டுகளுக்கு முன்பு ஒயாசிஸ்-ஐ நாங்கள் தொடங்கியபோது 9 தம்பதியரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை பிரச்சினை குறிப்பிட்ட அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு 4 தம்பதிகளுள் ஒரு தம்பதியருக்கு கருத்தரிப்பதில் பிரச்சினையிருக்கிறது. மேம்பட்ட கருத்தரிப்பு சிகிச்சைகளில் சான்று அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டு ஒரு வலுவான அடித்தளத்தை ஒயாசிஸ் நாங்கள் வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம். ஒயாசிஸ்-ல் நாங்கள் உருவாக்கியிருக்கிற சிகிசிச்சை நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள் உலகெங்கிலுமுள்ள IVF மையங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் மற்றும் எமது அனுபவத்தின் நேர்த்தியான ஒருங்கிணைப்பு கலவையாக இருக்கிறது.
பிற மாநிலங்களில் இதுவரை மிக வெற்றிகரமாக செயல்பட்டு வந்திருக்கும் அதே மாதிரி அடிப்படையில் சென்னையிலும் எமது வெற்றிகரமான பயணத்தை நாங்கள் இப்போது தொடங்குகிறோம்” என்று கூறுகிறார் திரு. கிரண் கடேலா. மலட்டுத்தன்மைக்கான பல்வேறு சிகிச்சைமுறைகள் அனைத்திலும் தனது பிரமாதமான வெற்றி விகிதங்கள் வழியாக புதிய தரவரையறைகளை ஒயாசிஸ் சென்டர் ஃபர் ரீ புரொடக்டிவ் மெடிசின் கடந்த பல ஆண்டுகளில் நிர்ணயித்திருக்கிறது. இத்தரநிலைகள், உலகளாவிய தரவரையறைகளை விட உயர்ந்ததாக இருக்கின்றன.