சொட்ட சொட்ட நனையுது விமர்சனம்

நவீத் எஸ். ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ருச்சோ, வர்ஷினி வெங்கட், ஷாலினி, கேபியு ராஜா ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் சொட்ட சொட்ட நனையுது. 

பணக்கார குடும்பத்தில் இருக்கும் ராஜா (நிஷாந்த் ருச்சோ) இளம் வயதிலேயே  தலையில் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையுடன் இருக்கிறார். 

இதனால் நிஷாந்தின் திருமணம் தடைபடுகிறது. பார்க்கும் பெண்கள் எல்லாம் நிராகரிக்கிறார்கள். 

தலையில் முடி இல்லாததால் தன்னம்பிக்கை இல்லாமல் தடுமாறுகிறார். 

இந்த சூழ்நிலையில் நிஷாந்தின் எதிர் வீட்டிற்கு வரும் ப்ரியா (வர்ஷினி வெங்கட்) நிஷாந்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். திருமண வேலைகள் மிகவும் மும்மறமாக நடந்து கொண்டிருக்கிறது.

மறுநாள் காலையில் திருமணம் நடைபெற வேண்டிய சூழ்நிலையில் நிஷாந்தின் நண்பனான கே பி ஒய் ராஜா ஒரு வீடியோவை அனுப்புகிறார். அதனை பார்த்ததும் நிஷாந்த் வர்ஷினி மீது கோபப்பட்டு திருமணத்தை நிறுத்தி விடுகிறார். 

நிஷாந்த் திருமணத்தை நிறுத்த காரணம் என்ன? அப்படி அந்த வீடியோவில் என்ன இருந்தது? நிஷாத்துக்கு வேறு திருமணம் நடந்ததா? இல்லையா? நிஷாந்தின் சொட்டை தலைக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதே சொட்ட சொட்ட நனையுது படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் –  Adler Entertainment  

இயக்கம் – நவீத் S ஃபரீத் (Debut)

திரைக்கதை & வசனம் – கலக்கப்போவது யாரு புகழ் ராஜா 

இசை – ரெஞ்சித் உன்னி

ஒளிப்பதிவு – ரயீஷ்

எடிட்டிங்க்  –  ராம் சதீஷ்

கலை இயக்கம் – ராம்குமார்

நடனம் – அப்சர் மற்றும் சபரீஷ் 

மக்கள் தொடர்பு – ராஜா