சில இடங்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தின் சில இடங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் அளித்த பேட்டியில், “தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. எனவே, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் அநேக இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும். நேற்று, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 10 செமீ மழையும், திருமானூர், திருக்காட்டுப்பள்ளி மற்றும் லால்குடி பகுதிகளில் 9 செமீ மழையும் பதிவாகியுள்ளது” என கூறியுள்ளார்.