விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே முன்பு இருந்து சமூக கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமம் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக சமூகநல்லிணக்க ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து.
ரெயில்வே நிலையம் முன்பு இருந்து யானை மற்றும் மேளதளங்கள் முழங்க தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று சக்திவிநாயகர் திருக்கோவிலை சென்றடைந்தது. இதில் மாணவ மாணவிகள் பாரத மாதா, விநாயகர், மீனாட்சி அம்மன் என பல்வேறு வேடங்கள் அணிந்தும், ஒற்றுமை உணர்த்தும் விதமாக தேசியக்கொடியை ஏந்தியும், பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு, பால்குடங்களுடன் திரளாக கலந்து கொண்டனர். தோடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களை கொண்டு சக்தி விநாயகருக்கு பாலபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது