‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் விமர்சனம்

இளவயது பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த பெண் யார்? அந்த பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.சூர்யா தலைமையில் காவல்துறை களத்தில் இறங்குகிறது. எந்தவித துப்பும் கிடைக்காமல் பல மர்மங்கள் நிறைந்த பாதையில் பயணிக்கும் விசாரணையை ஒரு கட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் முடித்துவிடுகிறார்கள். ஆனால், அந்த முடிவை ஏற்க மறுக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனி நபராக உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார், குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணைய தொடரோட மீதி கதை.

8 பாகங்களை கொண்ட இந்த இணையத்தொடரை அடுத்தது என்ன நடக்கும்? என்ற ஆர்வத்தோடு பார்க்க வைத்திருக்கிறார்கள்.

நடிகை-நடிகர்கள்:

எஸ்.ஜே. சூர்யா, லைலா, நாசர், குமரன்,
சஞ்சனா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ஸ்மிருதி வெங்கட், அருவி பாலாஜி, பிரதீப் குமார், திலிப் சுப்பராயன்
மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : புஷ்கர் காயத்ரி
இயக்கம் : ஆண்ட்ரூ லூயிஸ்
இசை : சைமன் கே.கிங்,
எடிட்டர் : ரிச்சர்ட் கெவின்
ஒளிப்பதிவு : சரவணன் ராமசாமி
மக்கள் தொடர்பு : யுவராஜ்