1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற மாதிரியான ஒரு கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார். இந்நிலையில் அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப் பேட்டியில், தான் ஓர் அனாதை என்று சொல்கிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரத்தொடங்குகின்றன. அவற்றில் ஒரு கடிதம், நான் உங்கள் மனைவி சீதாமகாலட்சுமி என்கிறது.
அவரால் ஈர்க்கப்பட்ட ராம், அவர் யார் என்பதைக் கண்டறிய ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்.
அனுப்புநர் முகவரி இல்லாத அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு அனுப்பியவர் யார் எனத் தேடிப்போகிறார் நாயகன். அவரைக் கண்டுபிடித்தாரா?
யார் இந்த சீதாமாலட்சுமி? என்பதே படத்தோட மீதி கதை.
நடிகை-நடிகர்கள்:
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா, வெண்ணிலா கிஷோர், சுமந்த், பிரகாஷ்ராஜ், சச்சின் கடேகர், பூமிகா சாவ்லா, ரோகிணி, ராகுல் ரவீந்திரன், கௌதம் வாசுதேவ மேனன், தருண் பாஸ்கர், சுனில், முரளி ஷர்மா மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் : ஹனு ராகவபுடி
தயாரிப்பு : அஸ்வினி தத், ஸ்வப்னா தத்
ஒளிப்பதிவு : பி எஸ் வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
இசை : விஷால் சந்திரசேகர்
பாடல்கள் : மதன் கார்க்கி
படத்தொகுப்பு : கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்.