சைரன் விமர்சனம்

ஹோம் மூவி மேக்கர்ஸ்  சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, துளசி, அழகம்பெருமாள், சாந்தினி தமிழரசன், அருவி மதன், யுவினா பார்த்தவி, அஜய், சுரேந்தர் (கே பி ஒய்), லல்லு பிரசாத், ப்ராதனா, முத்து குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சைரன்.

ஜெயம் ரவி, ஒரு கொலை குற்றவாளி, பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு 14 நாட்கள் பரோலில் வெளியே வருகிறார். 

தன் தந்தை, தாய், உறவினர்கள் மற்றும் தன் மகளான மலரையும் பார்க்க வருகிறார். 

தாய் இல்லாத அவரது மகள் அவர் மீது கடும்போகத்தில் இருப்பதோடு, அவரை பார்க்கவே விரும்பாமல் தனது எதிரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு  சென்றுவிடுகிறார். 

 

இந்த சமயத்தில் ஜெயம் ரவி சந்திக்கும் சில அரசியல் நபர்கள் கொலை செய்யப்படுகின்றனர் அதற்கு ஜெயம் ரவி தான் காரணம் என்று காவல்துறை அதிகாரியான கீர்த்தி சுரேஷ் அவரை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த கொலைகளை நான் செய்யவில்லை என்று சொல்லும் ஜெயம் ரவி, அதற்கான  ஆதாரங்களை நீதிபதி முன்பு காண்பித்து தப்பித்துவிடுகிறார். 

ஜெயம் ரவி தான் கொலையாளி என்பதை உறுதியாக நம்பும் கீர்த்தி சுரேஷ், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் தீவிரம் ஆர்வம் காட்டுகிறார். ஜெயம் ரவி தான் கொலை குற்றவாளி என்று கூறி கீர்த்தி சுரேஷ் தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? ஜெயம் ரவி தனது மகளுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே சைரன் படத்தோட மிதிக்கதை.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

இணை தயாரிப்பாளர் : அனுஷா விஜய்குமார்

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

பின்னணி இசை : சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு : செல்வகுமார் எஸ்கே

எடிட்டிங் : ரூபன்

தயாரிப்பு வடிவமைப்பாளர் : கதிர் கே

கலை இயக்குனர் : சக்தி வெங்கட்ராஜ் எம்

ஸ்டண்ட் : திலிப் சுப்பராயன்

நடன அமைப்பு : பிருந்தா

ஆடை வடிவமைப்பாளர்கள் : அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேதா, நித்யா வெங்கடேசன், ஜெபர்சன் டி.

நிர்வாக தயாரிப்பு : ஓமர்

தயாரிப்பு நிர்வாகி : சக்கரத்தாழ்வார் ஜி

தயாரிப்பு மேலாளர் : அஸ்கர் அலி ஏ

மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)