சார் விமர்சனம்

எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில், சிராஜ் எஸ், நிலேஃபர் சிராஜ் தயாரிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல், சாயா தேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெய பாலன், விஜய் முருகன், சரவண சக்தி, ஸ்ரீராம் கார்த்திக், பிரானா, எலிசபெத் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சார்.

1950 இல் விமலின் தாத்தாவான அண்ணாதுரை, எல்லா மக்களும் எந்த பாகுபாடு இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்று அந்த கிராமத்தில் பள்ளி ஒன்றை உருவாக்குகிறார்.

கல்வி கற்க செய்து ஒடுக்கப்பட்டவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்க முயற்சி செய்கிறார். படித்து விட்டால் அவர்களை அடிமைப்படுத்த முடியாது என்று நினைக்கும் உயர்சாதியில் இருக்கும். ஜெயபாலன் அந்த பள்ளியை அழிப்பதற்கு பலவிதமான சதிவேலைகளை செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பள்ளிகூடத்தை அழிக்க முடியாமல் அண்ணாதுரையை சாமி பெயர் சொல்லி பைத்தியமாக்கி விடுகிறார்கள்.

அண்ணாதுரை மகன் சரவணனும் அப்பாவை போல் ஆசிரியர் ஆகிறார். தொடக்க பள்ளியை, உயர் நிலை பள்ளியாக்கி, பள்ளியின் மூலம் பலருக்கு கல்வி அறிவை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போதும் உயர்சாதியினரால் பிரச்சினை ஏற்படுகிறது.

பிறகு, தன் மகன் விமல் தன்னோட வேலையை செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆனால், விமலின் முயற்சிக்கும், பிரச்சினை ஏற்படுத்தி உயர்சாதியினரின் வாரிசான சிராஜ், விமலுடன் நட்பாக பழகி அவருக்கு எதிரான சதி வேலைகளை செய்து வருகிறார்.

அவர்களின் சதி வேலையை விமல் எப்படி முறியடித்து அந்த பள்ளியை உயர்த்தி அங்குள்ளர்களுக்கு பாடம் கற்பிக்கிறார் என்பதே சார் படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : இனியன் ஜே ஹரிஷ்
இசை : சித்து குமார்
எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங்
கலை இயக்கம் : பாரதி புத்தர்
பாடல் வரிகள் : விவேகா, ஆத்தங்குடி இளையராஜா மற்றும் இளங்கவி அருண்
ஒலி கலவை : சிவகுமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் : கண்ணன்
மக்கள் தொடர்பு : சதீஷ் S2