சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ், ஆன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன்.

ஆர் ஜே பாலாஜியும், கிஷன் தாஸும் நண்பர்கள். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். சிறிய வயதில் தன்னுடைய கிராமத்தில் இருந்த சலூன் கடைக்காரர் லால் மீது மிகுந்த பாசம் உண்டாகிறது ஆர் ஜே பாலாஜிக்கு.

லாலின் முடிவெட்டும் ஸ்டைலைக் கண்டு, அதை ஆர் ஜே பாலாஜியும் அதனை பின்பற்றுகிறார். லாலை பார்த்து பார்த்து ஆர் ஜே பாலாஜிக்கும் முடிவெட்டுவதில் மிகுந்த ஆர்வம் மிகுந்த ஆர்வம் ஏற்படுகிறது.

கல்லூரியில் படிக்கும் போது காதலும் உண்டாகிறது அந்த காதல் தோல்வியில் முடிகிறது, கல்லூரி படிப்பை முடித்த பிறகு, ஆர்ஜே பாலாஜிக்கு, பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்கிறார் ஆர் ஜே பாலாஜி.

ஆர்ஜே பாலாஜி, முடி வெட்டும் தொழிலில் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்ற முயற்சியில், மிக பிரமாண்டமான சலூன் ஒன்றை திறக்க ஆசைப்படுகிறார். கஷ்டப்பட்டு சில கோடிகளை முதலீடாக வைத்து அந்த சலூனை திறக்கிறார்.

தொழில் போட்டியாளர்கள் ஒரு பக்கம் இயற்கை அழிவு ஒரு பக்கம் என பல சிக்கல்கள் வருகிறது. பிரச்சினைகளை எல்லாம் எப்படி சரி செய்தார்? சலுனை சிறப்பாக நடத்தினார் இல்லையா என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : கோகுல்

தயாரிப்பாளர் : டாக்டர் ஐசரி கே கணேஷ்

ஒளிப்பதிவாளர் : எம்.சுகுமார்

இசை : விவேக்-மெர்வின்

எடிட்டர் : செல்வா ஆர்.கே

பின்னணி இசை : ஜாவேத் ரியாஸ்

கலை இயக்குனர் : ஜெயச்சந்திரன்

நடன இயக்குனர் : பூபதி

ஒலி வடிவமைப்பு : சுரேன்.ஜி – அழகியகூத்தன்

ஆடை வடிவமைப்பாளர் : திவ்யா நாகராஜன்

நுகர்வோர் : தனபால்

VFX மேற்பார்வையாளர் : ஸ்டாலின் சரவணன்

ஸ்டண்ட் : பிரபு

டைரக்ஷன் டீம் : செந்தில் விநாயகர், அமீர் ஜமால் கான், வருண் ராஜேந்திரன், சுரேஷ் குரு, ஸ்டீபன், சதீஷ்

தயாரிப்பு நிர்வாகி : என். விக்கி, மகா காளி சிவா, வி. பாலமுருகன்

பாடல் வரிகள் : உமா தேவி, அறிவு

ஸ்பெஷல் மேக்கப் : ரோஷன்

ஒப்பனை : பிரகாஷ்

ஸ்டில்ஸ் : ராஜ்

DI & VFX : வெள்ளை தாமரை

பி.ஆர்.ஓ : சுரேஷ் சந்திரா

வடிவமைப்பு : டிசைன் பாயிண்ட்