அபாயம் எத்தனை பெரிதென்றாலும் எங்களை தடுக்க முடியாதென வீறு நடை போடுகிறது “சினம்” படக்குழு. கொரோனா உலகையே முடக்கி போட்டிருக்கும், இந்த இக்கட்டான காலகட்டத்திலும், உற்சாகம் பொங்க தீவிரமாக போஸ்ட புரடக்ஷன் பணிகளை செய்து வருகிறது படக்குழு. நாங்கள் திட்டமிட்டபடியே அனைத்தும் அற்புதமாக நடந்தேறி வருகிறது என பெரும் நம்பிக்கையுடன், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறார் இயக்குநர் GNR குமாரவேலன்.
படத்தின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் GNR குமாரவேலன் கூறியதாவது….
நடிகர் அருண் விஜய் தனது டப்பிங் பணிகளை முழுதாக முடித்து விட்டார். தற்போது மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடனே, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை துவக்கவுள்ளோம். அரசின் வழிகாட்டலின் படி நோயுக்கெதிரான அனைத்து முன்னெச்சரிக்கைகளும், தனி மனித இடைவெளியையும் கடைபிடித்தே, எங்கள் பணிகளை செய்து வருகிறோம்
சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரில் அருண் விஜய்யின் ‘ஆங்கார தோற்றம்’ ரசிகர்களிடம் பேராதரவு பெற்றது. இது பற்றி இயக்குநர் கூறுகையில்… போலிஸ் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகவும் எமோசலானது ஆனால் அதே நேரத்தில் கடும் கோபம் கொள்ளும் கதாப்பாத்திரம். அதனை அவர் முடிவு செய்வதில்லை. சூழ்நிலைகளே அவரின் குணத்தை தீர்மானிக்கிறது. மேலும் இது ஒரு திரில்லர் படமென்றாலும் குடும்பங்களை கவரும் பல உணச்சிபூர்வமான தருணங்களும், நேர்மறை விசயங்களும் நிறைய இருக்கிறது என்றார்.
இப்படத்தில் பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.