சென்னை, மார்ச் 12- அனைத்து வயது பெண்களுக்கும் முழுமையான சுகாதார ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க ‘சிம்ஸ் பெண்மை’ என்னும் அதிநவீன விரிவான பெண்கள் நல்வாழ்வு பராமரிப்பு மையத்தை சிம்ஸ் மருத்துவமனை இன்று திறந்தது.
இந்த மையத்தை எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து முன்னிலையில் பிரபல நடிகை ஊர்வசி, தனது மகள் தேஜாலட்சுமி ஜெயனுடன் திறந்து வைத்தார்.
பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான மருத்துவ சேவையை வழங்கும் ‘சிம்ஸ் பெண்மை’ மையம், அவர்களின் நல்வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தை கவனத்தில் கொண்டு செயல்படும். பெண்களுக்கான தனித்துவமிக்க மையமான இங்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் குழு மற்றும் அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளது.
பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான அனைத்துவிதமான சிகிச்சை, பெண்களின் இளமைப் பருவம் முதல் மாதவிடாய் நின்ற பிறகு வரையிலான சிறப்பு பராமரிப்பு, மதிப்பு சார்ந்த சுகாதார பராமரிப்பு ஆகிய நான்கையும் ஒருங்கிணைத்து செயல்பட உள்ளது.
இந்த புதிய மைய துவக்க விழாவையொட்டி வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் முன்பதிவு செய்யும் 100 பேருக்கு, இலவச மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசனை, இலவச அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், 50 சதவீத கட்டண சலுகையில் பிஏபி ஸ்மியர்ஸ் மற்றும் இலவச விந்து பகுப்பாய்வு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
இந்த மையத்தை திறந்து வைத்து நடிகை ஊர்வசி பேசுகையில், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த மையத்தை துவக்கி உள்ள சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அதன் திறமையான மருத்துவர்கள் குழுவிற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக, பெண்கள் வழக்கமான வேலை மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து விலகி, இப்போது பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் வேலையையும் சமநிலைப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக உள்ள நிலையில், தங்கள் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துவதில்லை.
சமூகம் – அது அரசாங்கமாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி, அல்லது பிற நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பல முயற்சிகளைக் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நாம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியது உள்ளது. பெண்களின் ஆரோக்கியம் என்பது அவர்களை சார்ந்தது மட்டுமல்ல, குடும்பம், சமூகம் மற்றும் பணியிடங்களில் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகும். எனவே அவர்களின் நலனில் அக்கறை கொண்டு சிம்ஸ் மருத்துவமனை மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு எனது நன்றியை தெரிவிப்பதோடு, அனைத்து பெண்களும் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபோன்ற முயற்சியை மற்ற மருத்துவமனைகளும் மேற்கொள்ள வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்தைக் கவனிப்பது நாட்டைக் கவனிப்பதாகும். இங்குள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து பேசுகையில், அனைவருக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்ற சிம்ஸ் மருத்துவமனைகளின் குறிக்கோளின் அடிப்படையில் இந்த மையம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது. சிம்ஸ் பெண்மை மூலம் தரமான மருத்துவ சேவையை பெண்களுக்கு வழங்க இம்மருத்துவமனை மேற்கொண்டுள்ள ஒரு தனித்துவமான முயற்சியாகும். எங்களின் சிம்ஸ் மருத்துவமனை துவங்கியதில் இருந்து, எங்களிடம் வரும் அனைவருக்கும் சிறந்த மற்றும் முழுமையான மருத்துவ சேவையை வழங்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இங்கு அனைத்து வயது பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும். வெளிப்படைத் தன்மையுடன் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், குறைந்த கட்டணம் ஆகியவை இந்த மையத்தின் சிறப்புகள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைத் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் சந்தியா வாசன் பேசுகையில், தற்போது துவக்கப்பட்டுள்ள இந்த மையம் பெண்களைப் பாதிக்கும் அனைத்து சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும். தங்களின் ஆரோக்கியம் குறித்து கவனிக்காமல் புறக்கணிக்கும் பெண்களுக்காக துவக்கப்பட்டுள்ள இந்த பிரத்யேக மையம் காலத்தின் தேவையாகும் என்றார்.
கருவிழி கருத்தரித்தல் பிரிவு மருத்துவத் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் எரிகா படேல் கூறுகையில், “சிம்ஸ் மருத்துவமனைகள் நோய்களை துல்லியமாக கண்டறிவதற்கான அதிநவீன மருத்துவ உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன, இதனால் மருத்துவ நிபுணர் குழு சரியான சிகிச்சை நெறிமுறைகளை வழங்க முடிகிறது. மேம்பட்ட பராமரிப்பை வழங்குவதோடு, சிம்ஸ் பெண்மை, பெண்களுக்கான தனிப்பட்ட சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், ஏனெனில் அவர்களில் பலர் இன்றும் கூட தங்கள் பிரச்சினைகளைப் பற்றித் தெரிவிப்பதில்லை, அதே நேரத்தில் அவர்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள். எனவே அவர்களுக்காகவே இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பெண்களுக்கான சுகாதாரப் பராமரிப்பில் ஒரு மைல்கல் சாதனையை குறிக்கும் வகையில் ‘சிம்ஸ் பெண்மை’ மையத்தை சிம்ஸ் மருத்துவமனை துவக்கி உள்ளது. இது சிம்ஸ் மருத்துவமனையின் முழுமையான, நோயாளிகள் பராமரிப்புக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, மருத்துவ நிபுணத்துவம், புதுமை மற்றும் இரக்க சிந்தனை ஆகியவற்றுடன், சிம்ஸ் பெண்மை பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சிறந்த மையமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.