‘சில்லாக்கி டும்மா’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏவி எம் ஸ்டுடியோவில் உள்ள கார்டனில் நடை பெற்றது. ‘அட்டு’ படத்தில் நாயகனாக நடித்த ரிஷிரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகி மோனிகா , யோகி பாபு, மைனா நந்தினி ,அபிஷேக் , சரவண சக்தி ,தீனா , ஜார்ஜ் விஜய் டிவி .பிஜ்ஜி ரமேஷ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு உதயசங்கர். எடிட்டிங் – எலிசா .இயக்கம் மாறன் கந்தசாமி.
தொடக்க விழாவில் நாயகன் ரிஷி ரித்விக் ,நடிகர் அபிஷேக் , இயக்குநர் சரவண சக்தி ,நடிகர் தீனா மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குநர் மாறன் கந்தசாமி பேசும் போது ,
” இந்தப் படத்தில் நாயகனாக ‘அட்டு’ படத்தில் நடித்த ரிஷி ரித்திக் நடிக்கிறார் .இது மூன்று கேங்ஸ்டர்களுக்கிடையே ஒரு நாளில் நடக்கும் கதை. படத்தின் தலைப்பை பார்த்து யாரும் அடல்ட்ஸ் படமாக நினைத்து விடக்கூடாது அப்படி யாரும் தவறாக நினைத்து விடாதீர்கள். இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான கதையாக இருக்கும்.” என்று கூறினார்.
நீண்ட நாட்களுக்குப் பின்பு பாரம்பரியமான ஏவிஎம் ஸ்டுடியோவின் கார்டன் பகுதியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. இப்படத்தை டீக்கடை சினிமா க்ரவுட் பண்டிங் புரொடக்ஷன் மற்றும் அருவி பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கின்றன.
டீக்கடை சினிமா என்பது சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் குறும்படம் போன்ற படைப்புகளைத் திரையீடு செய்து விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வந்தது .அது இப்போது ஒரு தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் பின்னே சினிமா ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள் .சினிமா வாய்ப்பு தேடி திறமையை வைத்துக்கொண்டு யாரும் சிரமப்படக்கூடாது அவர்களை தூக்கி நிறுத்த வேண்டும்; கை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த டீக்கடை சினிமா அமைப்பு உருவானது. இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது விருதினைப் பெற்றுக் கொண்ட இளைஞர் மாறன் கந்தசாமிதான் ‘சில்லாக்கி டும்மா’ படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர்கள் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன், டைரக்டர், சண்முகம் டைரக்டர் தாஸ் கந்தசாமி, டைரக்டர் ராகவன், டைரக்டர் சாம் ஆண்டன், மற்றும் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.