குடிமக்களாகிய நாம் அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் 50 சதவீத தள்ளுபடியில் உணவருந்தும் ஒரு வாய்ப்பு….
ஏதோ பல காரணங்களைக் காட்டி தேர்தலில் நாம் வாக்களிக்க பலரும் முன்வருவதில்லை ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்தத் தேர்தலில் மக்களின் பங்களிப்பை ஒட்டியே இருக்கும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக தேர்தல் வாக்குப்பதிவு என்பது 65 முதல் 75 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் வாக்குப்பதிவு சதவீதம் 90 ஐ தாண்டுகிறது. எனவே உண்மையான ஜனநாயகம் மலர அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்கிறார் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள clarion president ஹோட்டல் உரிமையாளர் அபூபக்கர்…
18 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 50 சதவீத தள்ளுபடி விலையில் தரமான உணவுகள் இங்கு கொடுக்கப்படுகிறது. வாக்களித்ததன் அடையாளமாக ஆட்காட்டி விரலின் மையை காட்டினால் போதும்.18 முதல் 21 ம் தேதி வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஹோட்டலுக்கு வரலாம் ஒவ்வொரு முறை உணவு அருந்தும் போதும் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்களிப்பது என்பது நம் மிக முக்கியமான கடமை என்பதை உணரும் நோக்கமாக இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறது கிளாரியன் பிரசிடெண்ட் ஹோட்டல் நிர்வாகம்.