‘ஷாட் பூட் த்ரீ’ விமர்சனம்

யூனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹ{ட், வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன், சாய் தீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஷாட் பூட் த்ரீ’.

கைலாஷ், வேதாந்த், பிரணநிதி, மூன்று பேரும் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள். இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறார் நண்பன் பூவையார். சினேகா-வெங்கட் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் கணவன் மனைவி அவர்களின் ஒரே மகன் கைலாஷ். நிறைய சம்பாதித்து, அவனுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்கும் அவர்களுக்கு கைலாஷிடம், பேச மட்டும் நேரம் ஒதுக்காமல் இருக்கின்றனர்.

அதே போல பல் மருத்துவராக இருக்கும் பெற்றோரின் மகள் பிரணநிதி நன்றாக பாடும் திறமை இருந்தாலும், அவளுக்கு வீட்டில் எந்தவிதமான சப்போட்டும் இல்லை.

சிங் குடும்பத்தில் இருப்பவர் வேதாந்த் வசந்தா, வறுமையான நிலையில் இருந்தாலும் அனைவரிடமும் பாசமாகவும் எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் உள்ளவராகவும் இருக்கிறார் பூவையார்.

பிரணநிதி, வேதாந்த் இருவரும் இணைந்து கைலாஷின் பிறந்த நாளுக்கு மேக்ஸ் என்ற கோல்டன் ரிட்ரிவர் நாய்க்குட்டியை பரிசாக கொடுக்கிறார்கள். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கைலாஷின் பெற்றோர் பிறகு கைலாஷின் பிடிவாதத்தால் சம்மதித்து மேக்ஸை வீட்டில் வளர்க்கிறார்கள்.

கைலாஷின் பெற்றோர் தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு, வேலையின் காரணமாக வெளியூருக்கு செல்ல, கைலாஷீம் அவனது நண்பர்களும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது மேக்ஸ் தொலைந்து போய் விடுகிறது.

கைலாஷீம் அவனது நண்பர்களும் மேக்ஸை தேடிச் செல்கின்றனர். இந்த சமயத்தில் மாநகராட்சி ஊழியர்கள் பெரும் பிரச்சனையாக இருக்கும் தெரு நாய்களை பிடித்து கொல்ல திட்டமிடுகின்றனர். தெருவில் வழி தெரியாமல் உலாவிக் கொண்டிருக்கும் மேக்ஸ் யோகிபாபுவின் ஆட்டோவில் ஏறிவிடுகிறது.

யோகிபாபு கடனை அடைக்க மேக்ஸை விற்க முடிவு செய்கிறார். அதே சமயம் குழந்தைகள் நாயை கண்டுபிடிப்பதற்காக நடிகை த்ரிஷாவின் நாய் காணவில்லை என்று பொய்யாக முகநூலில் பதிவிடுகின்றனர்.

இதனால் மேக்ஸை தேட பலர் முன் வருகின்றனர். கடைசியில் மேக்ஸ் கைலாஷிடம் கிடைத்ததா? இல்லையா?
கைலாஷீம் அவரது நண்பர்களும் மேக்ஸை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

திரைக்கதை : ஆனந்த் நாகவ் மற்றும் அருணாச்சலம் வைத்தியநாதன்

ஒளிப்பதிவு : சுதர்சன் ஸ்ரீனிவாசன்

இசை : ராஜேஷ் வைத்தியா

எடிட்டிங் : பரத் விக்ரமன்

கலை : ஆறுசாமி

சண்டை : சுதேஷ்

நிர்வாக மேற்பார்வை : அருண்ராம் கலைச்செல்வன்

நிர்வாக தயாரிப்பு : வெங்கடேஷ் சடகோபன்

இணை தயாரிப்பு : முகில் சந்திரன்

தயாரிப்பு நிர்வாகி : கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன்

பிஆர்ஒ : நிகில் முருகன