சென்னை, 17 அக்டோபர், 2022: 12.1 பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள HCL என்ற உலகளாவிய முன்னணி பெரு நிறுவனத்தின் நிறுவனர் திரு. ஷிவ் நாடாரின் அறச்செயல் நடவடிக்கை பிரிவான ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் அதன் பிரபலமான K-12 ஸ்கூல் சங்கிலித்தொடர் சென்னை மாநகரில் ஷிவ் நாடார் ஸ்கூல் என்ற பெயரில் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது. பாரம்பரிய மதிப்பீடுகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒரு நவீன கண்ணோட்டத்துடன்கூடிய சர்வதேச பள்ளியாக திகழ்வதே இதன் குறிக்கோளாகும். கல்வி மீது இந்த ஃபவுண்டேஷன் கொண்டிருக்கும் மிக ஆழமான பொறுப்புறுதியை இத்தொடக்கத்தின் மூலம் மீண்டும் உறுதிசெய்திருக்கும் இப்பள்ளி, இன்டர்நேஷனல் பக்காலோரியேட் (IB) போர்டு உடன் இணைக்கப்பட்டதாக இயங்கும். இளம் மாணவர்களின் முழுமையான உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உலகத்தரத்திலான கல்வியை இப்பள்ளி வழங்கும். கல்வி செயல்பாடுகள் தொடங்கும் முதல் ஆண்டில் ஏறக்குறைய 150 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் மற்றும் பள்ளிச்சேர்க்கையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.
நர்சரி வகுப்பிலிருந்து 4-ஆம் வகுப்பு வரையிலான புதிய கல்வி அமர்வு 2023 ஜுன் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் இதற்கான பதிவு செயல்முறை விவரங்கள் https://shivnadarschool.edu.in/chennai/ என்ற இணையதளத்தில் கிடைக்கப்பெறுகின்றன.