சாங்ஸீ திரைப்பட விமர்சனம்

மார்வல் படம் என்றாலே பிரம்மாண்டம் இருக்கும் காட்சிக்கு காட்சி பரபரப்பு இருக்கும்  படத்தில் மிகவும் அற்புதமான சில காட்சிகள். குழந்தைகள் கொண்டாடும் படியான காட்சிகள்,  டெக்னிக்கலாக  காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் வில்லன்  சாங் சீயையும் அவன் தங்கச்சியும் தேடி வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகிறது,  பஸ்ஸில் நடக்கும் சண்டை காட்சிகளும்  பரபரப்பை ஏற்படுகிறது
 
நாயகனின் வாழ்க்கை உளவியல் நிபுணராக நடந்து கொள்கிறார் என்பது புரியாத புதிர் போட்டு விளக்கியுள்ளனர். 
 
நாயகனின் அம்மா என்ன ஆனார் என்று சஸ்பென்ஸ் த்ரில்லர் உடன் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.
 
ஆன்மாவைத் திங்கும் இருளில் நிழல்கள் வில்லன்கள் கூட்டமா வந்து கடைசி காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.  மெக்காவில் நடக்கும் பில்டிங் சண்டைக்காட்சி சிறப்பாக உள்ளது.  பறக்கும் குதிரை துரத்தும் காடு மலை முகடு  மார்வெல் ஸ்டுடியோ படமான பிளாக் பாந்தர் படத்தில் இன்னொரு உலகம், பிரமாண்ட நகரமாக காட்டப்பட்டது . ஆனால் இந்த படத்தில் சின்ன கிராமம் ஆக காட்டி உள்ளனர் படக்குழுவினர்.
 
கிளைமாக்ஸ் தண்ணீரில் நடக்கும் காட்சியில் கிராபிக்ஸ் பணத்தை தண்ணீர் ஆக சிலவு செய்து உள்ளனர், சலூட்.
 
ஃபிளாஷ் பேக் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது, இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரட்டன் பாராட்ட வேண்டியவர். திரைக்கதை வசனம்  டேவ் டேனியல் கிரட்டன் ஆண்ட்ரூ ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதி உள்ளனர். மொத்தத்தில் படம் ஆக்ஸன் கலந்த காமெடி என கலகலப்பாக உள்ளது.