சக்தி திருமகன் விமர்சனம்

அன்பு அருண் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், த்ரிபதி ரவீந்திரா, செல் முருகன், சுனில் கிர்பலானி, கிரன்குமார், சோபா விஸ்வநாத், ரினி, மாஸ்டர் கேசவ், ரியா ஜித்து ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சக்தி திருமகன்.

தலைமைச் செயலகத்தில் என்ன வேலையாக வேண்டும் என்றாலும் கேட்ட பணத்தை கொடுத்தால் செய்து தரும் இடைத்தரகர் வேலை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி என்கிற கிட்டு.

சாதாரண கவுன்சிலரில் இருந்து டெல்லி வரையிலும் தன்னுடைய பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்கிறார் விஜய் ஆண்டனி.

இதனையே செய்து கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாகவும் சென்ட்ரலில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபராகவும் இருக்கும் சுனில் கிரபலானியின் நம்பிக்கைகுறியவராகவும் இருந்து வருகிறார்.

சுனிலின் தங்கை கணவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக திட்டம் போட்டு அவரை கொலை செய்து விடுகிறார் விஜய் ஆண்டனி. 

இந்த சூழ்நிலையில் சுனிலுக்கு விஜய் ஆண்டனியின் மீது ஒரு சந்தேகம் ஏற்பட ஒரு போலீஸ் அதிகாரியை நியமித்து விஜய் ஆண்டனியை கண்காணிக்க ஆரம்பிக்கிறார். 

அந்த கண்காணிப்பில் பல்லாயிரம் கோடி பணத்தை விஜய் ஆண்டனி சம்பாதித்து வைத்திருந்ததும், தனது தங்கை கணவரை விஜய் ஆண்டனி தான் கொலை செய்ய திட்டம் போட்டுக் கொடுத்தார் என்பதும் தெரிய வருகிறது. 

அதன் பிறகு விஜய் ஆண்டனியையும், அவரது நண்பரான செல்முருகனையும் மனைவியான திருப்தியையும் தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகின்றனர் போலீசார். 

ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனியை அவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் கையடி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமினில் விடுகின்றனர்.

ஜாமினில் வெளிவந்த விஜய் ஆண்டனி அவரிடம் இருந்த பணத்தை என்ன செய்தார்? விஜய் ஆண்டனியின் பின்னி மற்றும் நோக்கம் என்ன என்பதே சக்தி திருமகன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : அருண் பிரபு 

ஒளிப்பதிவு : ஷெல்லே ஆர் காலிஸ்ட் 

இசை : விஜய் ஆண்டனி

மக்கள் தொடர்பு : ரேகா