நடிகர் நடிகைகள் :
கலையரசன், வாணி போஜன், சரத் லோகிதாஸ், விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஷ், பவன், வேலராமமூர்த்தி, லகுபரன், டேனியல், அர்ஜை, பிரேம், கஜராஜ், முத்துக்குமார், பூஜா வைத்தியநாதன், பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : அபி & அபி என்டர்டைன்மென்ட் அபினேஷ் இளங்கோவன்
இயக்கம் : எஸ்.ஆர். பிரபாகரன்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன்
இசை : தரண்
படத்தொகுப்பு : பிஜு வி.டான்பாஸ்கோ
மக்கள் தொடர்பு : சதீஷ், சதீஷ்குமார், சிவா
(AIM)
விருதுநகர் மாவட்டத்தோட நகராட்சியை
சரத் லோகிதாஸின் குடும்பம் தங்களது கட்டுப்பாட்டில் 40 வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கிறது. இவர்களுடைய குடும்பத்திற்கும், இவர்களுக்கும் இருக்கும் மரியாதையை சிதைத்து விருதுநகர் நகராட்சியை கைப்பற்ற நினைக்கிறது மாநிலத்தை ஆளும் கட்சி.
இந்நிலையில் லோகிதாஸின் மகனான நகராட்சித் தலைவர் பவனை வாணி போஜன் இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக சில மாதங்களில் பவன் ஒரு கார் விபத்தில் மரணம் அடைகிறார்,
இந்நிலையில் வாணி போஜனுக்கு அரசியல் ஆசை ஏற்படுகிறது. அரசியல் ஆசையை தன்னோட கணவரின் குடும்பத்தாரிடம் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்றாலும் கணவன் வகித்த பதவியில் தான் அமரவேண்டும் என்று திட்டம் போடுகிறார். அதற்காக ஊரில் இருந்து தன் தோழியான
ஷாலியைஅழைத்துக் கொண்டு வருகிறார் வாணி போஜன்.
வாணி போஜன் நினைத்தது நடந்ததா இல்லையா என்பதை பல அரசியல் விளையாட்டு தந்திரங்களோடும், சஸ்பென்ஸ்களுடன் விருவிருப்பாக சொல்லி இருப்பதே ‘செங்களம்’ இணைய தொடர் கதை.
9 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடர் அடுத்து என்ன அடுத்து என்ன என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கிறது. ‘செங்களம்’ இணையத்தொடரில் நடித்த அனைவரும்
தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ‘செங்களம்’
இணையதொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.