அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், சென்னை 70, அனகாபுத்தூர் அயோத்தி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் 10- 3-2019 ஞாயிறு அன்று காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் புனருத்தாரண ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.

ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகருக்கும், மற்றும் புதியதாக ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ நவசக்தி துர்கை நவக்கிரஹ சன்னதிகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கான மஹா கும்பாபிஷேக வைபவமும் நடைபெற்றன.

பக்தர்கள், அன்பர்கள், பொதுமக்கள், தாராளமாக நன்கொடைகள் அளித்து, பொருளுதவி தந்து, உடலுழைப்பும் நல்கிக் கும்பாபிஷேக வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெற உதவினர்.