செல்ஃபியால் மாணவர்கள் பலி

டெல்லியில் செல்ஃபி மோகத்தால் 2 மாணவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யாஷ் குமார், சுப்ஹம் இருவரும் டெல்லியில் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஆவர். இருவரும் டெல்லி ஆனந்த்விஹா ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே நின்று கேமராவில் படம் எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர் திசையில் ரயில் வருவதை கண்டு தப்பிக்க நினைத்த இருவரும் மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  செல்ஃபி மோகம் 2 உயிர்களை பறித்துள்ளது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்திவரும் ரயில்வே போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்று சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். செல்ஃபி மோகத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.