அர்ஜுன் இயக்கத்தில், நிரஞ்சன், சுசிந்த்ரா, ஐஸ்வர்யா அர்ஜுன், அர்ஜுன், துருவா சர்ஜா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கோவை சரளா, சரண் ஸ்ரீ ஹனுமந்த், நியா, மணி சந்தனா, சௌமித்ரா, நர்ரா ஸ்ரீனு, சஹஸ்ரா, ராஜ்குமார், சஞ்சய், நாக மகேஷ், சுமத்ரா, போசானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சீதா பயணம்.
நாயகி ஐஸ்வர்யா ராய், சிறு வயதிலேயே தன்னுடைய அம்மாவை இழுந்துவிட்டு அப்பா சத்யராஜின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். நன்றாக படித்து ஒரு சமையல் கலை வல்லுனராக இருக்கிறார்.
நாயகி ஐஸ்வர்யா மதுரையில் நடக்கும் ஒரு சமையல் வொர்க் ஷாப்பிற்கு செல்கிறார். அப்படி ஐஸ்வர்யா மதுரையை நோக்கி செல்லும் வழியில் நாயகன் நிரஞ்சன் சுசிந்த்ரா தன்னை போற வழியில் இறக்கி விடுமாறு அவரிடம் லிப்ட் கேட்கிறார் இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள்.
அப்படி போகும் வழியில் ரோட்டில் பழம் விற்கும் பெண், மாட்டை அழைத்து செல்லும் சிறுவன், ஒரு டீக்கடை வைத்திருக்கும் கோவை சரளா, மற்றும் அர்ஜுனை சில சந்தர்ப்பங்களில் சந்தித்து விட்டு நாயகன் நிரஞ்சனை அவருடைய ஊரில் இறக்கிவிட்டு ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு ஐஸ்வர்யா செல்கிறார்.
ஐஸ்வர்யா அந்த ஹோட்டலில் கால் எடுத்து வைக்கும் சமயத்தில் அந்த ஹோட்டல் தீ பிடித்து சிதறுகிறது. 20 நொடியில் ஐஸ்வர்யா உயிர் தப்பிக்கிறார்.
இந்த விபத்தில் உயிர் தப்பி ஐஸ்வர்யா அந்த 20 நொடி தாமதமாக தான் செல்வதற்கு காரணமாக இருந்த வழியில் பார்த்த அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அந்த பயணத்தை தொடங்குகிறார்.
தன் உயிரைக் காப்பாற்றிய அந்த நபர்களுக்கு ஐஸ்வர்யா நன்றி கூறினாரா? இல்லையா? என்பதே சீதாபயணம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : அர்ஜுன் படத்தொகுப்பு : அயூப்கான்
ஒளிப்பதிவு : ஜி. பாலமுருகன்
இசை : அனுப் ரூபன்ஸ்
தயாரிப்பு : அர்ஜுன்
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

