விடியல் ஸ்டுடியோஸ் சார்பில், டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதி, அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் இயக்கத்தில், நட்டி நட்ராஜ்,
நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், ஆதேஷ் பாலா, மூர்த்தி, மாஸ்டர் ராஜநாயகம், தயாரிப்பாளர் டாக்டர்.செந்தில் வேலன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சீசா.
இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் மாயமாகி விடுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிய வருகிறது. பாடினியின் நிலை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக, வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் நட்டி நட்ராஜுக்கு, அதிர்ச்சிகரமான உண்மையும், பாடினியின் நிலையும் தெரிய வருகிறது. அது என்ன ?, அதன் பின்னணியில் இருப்பது யார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : விடியல் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர் : டாக்டர்.கே.செந்தில் இயக்குநர் : குணா சுப்பிரமணியம்
இசை : சரண் குமார்
ஒளிப்பதிவு : பெருமாள் மற்றும் மணிவண்ணன்
படத்தொகுப்பு : வில்சி ஜெ.சசி
மக்கள் தொடர்பு : ஜே கார்த்திக்