சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிப்பில், சுரேஷ் சங்கையா இயக்கத்தில், பிரேம்ஜி அமரன், ஸ்வயம் சித்தா ,ரேஷ்மா, சித்தன் மோகன், செல்வ முருகன், ஹரிதா, பாரதி, ராஜேந்திரன், ஞானசம்பந்தம், முத்துப்பாண்டி, கர்ண ராஜா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சத்திய சோதனை”.
அருப்புக்கோட்டையில் உள்ள சங்குப்பட்டி கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நாயகன் பிரேம் ஜி, ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைப்பவர், அந்த உடலில் இருக்கும் வாட்ச், போன் மற்றும் சிறிய தங்க செயின் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் கொடுக்கப்பதற்கு செல்கிறார்.
அதே சமயம், நாங்கள்தான் கொலை செய்தோம் என்று, காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள், கொலை செய்யப்பட்டவர் நிறைய தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள். இதனால், புகார் கொடுக்க வந்த பிரேம்ஜியை நன்றாக விசாரித்தால் நகையை மீட்கலாம் என்று விசாரணை திசை மாறுகிறது. பிரேம்ஜியோ தான் ஒப்படைத்த பொருட்களை தவிர வேறு எதுவும் அவரின் உடலின் மேல் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறார்.
இருப்பினும் போலீசார் நம்பாமல் அடித்து விசாரிக்கின்றனர் பிரேம்ஜியை. இறுதியில் தொலைந்து போன நகைகளை போலீசார் பத்திரமாக மீட்டார்களா? பிரேம்ஜியின் நிலைமை என்ன ஆனாது? யார் நகையை எடுத்தார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தார்களா? என்பதே
“சத்திய சோதனை” படத்தோட மீதிக்கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசை : ரகு ராம். எம்
பின்னணி இசை : தீபன் சக்கரவர்த்தி
பாடியவர்கள் : கங்கை அமரன், வீரமணி ராஜு, திவாகர்
ஒளிப்பதிவாளர் : ஆர்.வி. சரண்
எடிட்டர் : வெங்கட் ராஜன்
கலை இயக்குனர் : வாசுதேவன்
பாடல் வரிகள் : வேல்முருகன்
வசனங்கள் : வி.குருநாதன் மற்றும் சுரேஷ் சங்கையா
வண்ணம் : அஜித் வெடி பாஸ்கரன் கலவை : ராஜா நல்லையா
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்