சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படும் சசிகலா தனது விருப்பப் பட்டியல் ஒன்றை சிறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது. அதில் தனது கோரிக்கைகள் பலவற்றைத் தெரிவித்துள்ளாராம். கிட்டத்தட்ட 3.6 ஆண்டுகளை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் கழிக்கவுள்ளார் சசிகலா. அவருடன் இளவரசி, சுதாகரனும் சிறையில் கழிக்கவுள்ளனர்.
சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிறையில் சில வசதிகளை எதிர்பார்க்கிறார் சசிகலா. ஆனால் அவை எல்லாம் கிடைக்குமா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான கோரிக்கைகள் அடிப்படை வசதிகள்தான்.
வீட்டுச் சாப்பாடு
வீட்டுச் சாப்பாடு, வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் என்று கேட்டுள்ளாராம் சசிகலா. வாக்கிங் போக இடம் தேவை, 24 மஅணி நேர தண்ணீர் வசதி தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளாராம்.
கட்டில் டிவி
சசிகலாவுக்கு கட்டில், டிவி வசதியுடன் கூடிய அறையை ஒதுக்க சிறை நிர்வாகம் தயாராக உள்ளதாம். அவருக்கு உதவியாளரும் கூட ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமாம். இருப்பினும் மற்ற கோரிக்கைகள் சிறை விதிகளுக்குப் புறம்பானதாக இருப்பதால் அதற்கான சாத்தியம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
மருத்துவ பரிசோதனை
சிறைக்குள் அடைக்கப்படுவதற்கு முன்பு சசிகலாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். அவரது உடல்நிலை குறித்து சான்றிதழும் டாக்டர்கள் வழங்குவர். அதன் பிறகே அவர் செல்லில் அடைக்கப்படுவார்.
பாதுகாப்பு வசதி
சசிகலா விஐபி கைதி என்பதால் அவருக்கு சிறையில் பாதுகாப்பும் வழங்கப்படும். 24 மணி நேர பாதுகாப்பு அவருக்குக் கிடைக்கும். முன்பு ஜெயலலிதாவுடன் சேர்ந்து தங்கியிருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லாமல் தங்கப் போகிறார்.
2வது முறை
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசிகலா வருவது இது 2வது முறையாகும். முன்பு ஜெயலலிதாவுடன் இங்கு 21 நாட்கள் தங்கியிருந்தது நினைவிருக்கலாம். தற்போது 3.6 வருட காலம் அவர் தங்கப் போகிறார்.