சசிகலா குற்றமற்றவர் என்பது நீதி விசாரணை மூலம் நிரூபணமாகும்

டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறுகையில், அதிமுக தொண்டர்கள் எண்ணங்களுக்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது. நீதி விசாரணை மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனை அரசுடமையாக்கும் முடிவு என்பது அவசர கதியில் எடுக்கபட்டதாகும். பதவியை காப்பாற்றி கொள்ள இரு அணிகளும் இணைந்தால் ஆயுட்காலம் நீடிக்காது. சசிகலா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவரது ஆலோசனை படி அடுத்த அறுவை சிகிச்சைகளும் நடைபெறும் என்றும் கூறினார்.