ஜிவி பெருமாள் இயக்கத்தில், தர்ஷன் பிரியன், சார்மி விஜயலட்சுமி, பாய்ஸ் ராஜன், ஷகீலா, மனோஜ், மதுமிதா, கௌரி, மிலா, புதுப்பேட்டை சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் சரீரம்.
தர்ஷன் பிரியனும் சார்மி விஜயலட்சுமியும், ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். சார்மியின் அப்பா புதுப்பேட்டை சுரேஷ் மிகப்பெரும் கோடீஸ்வரராகவும் தொழிலதிபராகவும் இருக்கிறார். சார்மியின் மாமா மனோஜ் ஒரு ரவுடியாக இருக்கிறார்.
சார்மி அவருக்கு ஒரே மகள் என்பதால் அதிகமான செல்லத்தை கொடுத்து வளர்க்கிறார். சார்மி மாமா மனோஜ் சார்மியை திருமணம் செய்து கொண்டு மொத்த சொத்தையும் தானே அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சார்மி தர்ஷனை காதலிப்பதால் அவனை திருமணம் செய்து கொண்டால் தனக்கு சொத்து கிடைக்காமல் போய்விடும் என்ற காரணத்திற்காக மாமா மனோஜ் மற்றும் அவரின் அடியாட்கள் தர்ஷனை கொலை செய்து ஆற்றில் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
தர்ஷன் இறந்து விட்டான் என்று நினைத்து சார்மியும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஆனால் சார்மின் அப்பா அவரை காப்பாற்றி விடுகிறார்.
சார்மி அட்மிட் ஆகி இருக்கும் அதே மருத்துவமனையில் தர்ஷனின் நண்பர்கள் தர்ஷனை காப்பாற்றி அட்மிட் செய்திருக்கிறார்கள்.
இருவரும் உயிரோடு இருப்பது தெரிந்து ஒருவரை சந்தித்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வேறு ஊருக்கு தப்பி சென்று வாழ நினைக்கிறார்கள்.
அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை கொன்று விடுவார்கள் என்று நினைத்து அவர்கள் ஒரு விபரீதமான மற்றும் வித்தியாசமான முடிவை எடுக்கிறார்கள்.
அந்த முடிவு என்ன? அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? அதனை அவர்களால் சமாளிக்க முடிந்ததா? இல்லையா? என்பதே சரீரம் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஜிவி பெருமாள்
இசை : பாரதிராஜா
ஒளிப்பதிவு : டொர்னாலா பாஸ்கர் & பரணி குமார்
நடனம் : ஜே மனோஜ்
சண்டை : தவசி ராஜ்
மக்கள் தொடர்பு : மணிமதன்