கார்த்தி காவல்துறையில் திறமைமிக்க அதிகாரியாக பணியாற்றினாலும்,
இந்திய ராணுவத்தில் உளவாளியாக பணியாற்றிய அப்பா கார்த்தி, தேசத்துரோகி என்ற கெட்டப் பெயரோடு காணாமல் போவதால், அந்த கெட்டப்பெயரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படுகிறார்.
இதற்கிடையில், இந்தியாவை குறிவைத்து மிகப்பெரிய அளவில் சதி திட்டம் ஒன்று தீட்டப்படுகிறது. அந்த திட்டத்தை தடுத்து நிறுத்த மாயமான உளவாளி கார்த்தியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர் சிலர். சதி திட்டம் தீட்டும் வில்லன் கூட்டம் கார்த்தியை கண்டுபிடித்து கொலை செய்ய முயற்சி செய்கிறது. இந்தியாவுக்கு எதிரான சதி திட்டம் என்ன? உளவாளி கார்த்தி மீண்டும் வந்தாரா? சதி திட்டடத்தை முறியடித்தார்களா? இல்லையா? என்பது தான் ‘சர்தார்’ படத்தோட மீதிக்கதை.
அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி.
ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, ரித்விக், ஜங்கி பாண்டி, மொஹமத் அலி, யூகி சேது, முனிஷ்காந்த் என படத்தில் நடித்திருக்கும் சிறப்பாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது.
சமூக அக்கறையோடு ஒரு கருத்தை எடுத்து படமாக்கி இயக்குனர் மித்திரனுக்கு பாராட்டுக்கள் .
தீபாவளி ரேஸில் கார்த்தியின் சாரார் சூப்பர்.
நடிகை-நடிகர்கள்:
கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, ரித்விக், ஜங்கி பாண்டி, மொஹமத் அலி, யூகி சேது, முனிஷ்காந்த்
மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார்
இயக்கம் : பி.எஸ். மித்ரன்
இசை : ஜி. வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : ஜார்ச் சி.வில்லியம்ஸ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்